பீகாரின் பூர்னியாவில் இன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் குறைந்தது 4 பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும் ரயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஜோக்பானியிலிருந்து பாடலிபுத்ராவுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், அதிகாலை 5:00 மணியளவில் நகரத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விவரம் இன்னும் வெளியாக வில்லை.. இது ரயில்வே கிராசிங் ஊழியரின் அலட்சியமா அல்லது மக்கள் அதிவேக ரயிலை புறக்கணித்து கடக்க முயன்றதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் ஜிஎம்சிஎச்சில் அனுமதிக்கப்பட்டார். துர்கா மேளாவில் ஒரு கலாச்சார நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு சில இளைஞர்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. அவர்களில் மூன்று பேர் வேகமாக வந்தே பாரத் ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..
Read More : ஷாக் நியூஸ்..! அக்.1 ஆதார் அப்டேட் செய்வதற்கான கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?