கடந்த 2024 மார்ச் மாதம், சுமார் 17 ஆண்டுகாலமாக தான் கட்டிக் காத்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியோடு இணைத்த சரத்குமார், தற்போது அந்த முடிவினால் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்சியை இணைத்த போது அவருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும், தற்போது அவர் நடத்தப்படும் விதமும் பெரும் இடைவெளியை கொண்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் முணுமுணுக்க தொடங்கியுள்ளனர்.
பாஜகவில் இணைந்த பிறகு, தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ தனக்கு ஒரு முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என சரத்குமார் எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால், கட்சியில் இணைந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நெருங்கிய நிலையிலும், அவருக்குப் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. கட்சியின் முக்கிய முடிவுகளில் அவர் புறக்கணிக்கப்படுவதாகவும், வெறும் நட்சத்திரப் பேச்சாளராக மட்டுமே பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த அதிருப்தியின் பின்னணியில், சரத்குமார் தனது பழைய பாசறையான திமுக-வுக்கு திரும்ப ரகசியமாக முயன்றதாக ஒரு தகவல் அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. 2001-ல் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அனுபவத்தை கொண்டு, மீண்டும் அங்கே நுழைய அவர் காய் நகர்த்தியதாகவும், ஆனால் திமுக தலைமை அதற்குப் பச்சைக்கொடி காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது
2026இல் என்ன செய்வார் சரத்குமார்..?
விஜய் போன்ற புதுவரவுகளும், பிளவுபட்ட அதிமுகவும் களத்தில் உள்ள நிலையில், சரத்குமார் மீண்டும் ஒரு தனிக்கட்சியை தொடங்குவாரா அல்லது பாஜகவிலேயே சகித்துக்கொண்டு இருப்பாரா? என கேள்வி எழுந்துள்ளது.
Read More : தமிழ்நாட்டில் நாளை முதல் லாரிகள் ஓடாது..!! அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்..!!



