கருங்குறுவை அரிசி கஞ்சி..!! அசுர வேகத்தில் உடல் எடையை குறைக்கும் பாரம்பரிய உணவு..!! இப்படி செஞ்சி சாப்பிடுங்க..!!

Black Rice 2025

உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துபவர்களுக்கும், குறிப்பாக எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமான உணவு நம் பாரம்பரிய அரிசி வகைகளுள் ஒன்றான கருங்குறுவை அரிசிக் கஞ்சி ஆகும். இந்தச் சத்து நிறைந்த அரிசியைக் கொண்டு கஞ்சி தயாரித்து தினமும் குடிப்பதன் மூலம், உடலுக்கு நல்ல வலிமை கிடைப்பதுடன், தேவையற்ற கழிவுகளும் நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை வேகமாக குறைய உதவுகிறது என்று இயற்கை உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.


கருங்குறுவையின் ஆரோக்கிய ரகசியம் :

கருங்குறுவை அரிசி, கருப்பு கவுனி போன்ற மற்ற பாரம்பரிய அரிசிகளைவிட அதிக சத்துக்களைக் கொண்டுள்ளது. ஒரு கப் கருங்குறுவை அரிசியில், கிட்டத்தட்ட 10 கைப்பிடி முருங்கைக் கீரையில் உள்ள சத்துக்கள் அடங்கி இருப்பதாக நம்பப்படுகிறது. இது உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் உகந்த உணவாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சத்தான கஞ்சியைப் பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் சாப்பிடலாம்.

கருங்குறுவை அரிசி கஞ்சிக்கு தேவையான பொருட்கள் :

கருங்குறுவை அரிசி – 1 கப்

தண்ணீர் – 8 கப்

மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கியது)

துருவிய தேங்காய் – 1/2 கப் (விரும்பினால்)

செய்முறை :

* முதலில் கருங்குறுவை அரிசியை இரண்டு முறை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அதில் சுத்தமான நீரை ஊற்றி, அரிசியை இரவு முழுவதும் அல்லது குறைந்தது 7 மணி நேரம் ஊற வைக்கவும்.

* அரிசி நன்கு ஊறிய பின், நீரை வடிகட்டிவிட்டு, அரிசியை மிக்ஸர் ஜாரில் சேர்த்து, ரவை பதத்திற்குப் பொடித்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு குக்கரை எடுத்து, அதில் பொடித்த அரிசியைச் சேர்க்கவும். அத்துடன் அரிசி ஊற வைத்த நீரை சேர்த்து, மீதமுள்ள 8 கப் நீரையும் ஊற்றிக் கொள்ளவும்.

* அதனுடன் மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு பற்களைச் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

* குக்கரை மூடி, அடுப்பில் வைத்து 5 விசில் வரும் வரை வேக வைத்து இறக்க வேண்டும்.

* விசில் போன பின் குக்கரைத் திறந்து பார்க்கவும். கஞ்சி மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது சுடுநீரை ஊற்றிச் சரி செய்து கொள்ளவும். இறுதியாகத் துருவிய தேங்காயைச் சேர்த்து நன்கு கிளறி, உப்புச் சுவை பார்த்துப் பரிமாறினால், சுவையான மற்றும் சத்தான கருங்குறுவை அரிசி கஞ்சி தயார்.

Read More : உங்கள் வீட்டில் செல்வத்தை அதிகரிக்க வேண்டுமா..? முதலில் வாஸ்து குறைபாடுகளை நீக்குங்கள்..!! சக்திவாய்ந்த பரிகாரம் இதோ..!!

CHELLA

Next Post

தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளில் திருத்தம்...! 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது...!

Mon Nov 10 , 2025
தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) (மூன்றாவது திருத்தம்) விதிகள், 2025, வரும் 2025 நவம்பர் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் இல்லாத பயனர்களிடையே டிஜிட்டல் முறையிலான கட்டணங்களை ஊக்குவிக்கவும், ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலுமாக அகற்றும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) விதிகள், 2008-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, செல்லுபடியாகும் மற்றும் செயல்படும் […]
toll plaza 1

You May Like