வெயிலை சமாளிக்க கருப்பட்டி பானங்கள்!… இந்த 4 பொருட்களை சேர்த்து டிரை பண்ணுங்க!…

கோடை வெயிலை சமாளிக்க கருப்பட்டியுடன் சிலப் பொருட்களை சேர்த்து பானங்கள் தயாரித்து குடிப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன.


கோடை காலங்களில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க எல்லோரும் பல வழிமுறைகளை பின்பற்றுவார்கள். தர்பூசணி பழம், நுங்கு, இளநீர், தேங்காய் பூ போன்ற பல உணவுப் பொருள்கள் கோடை காலத்தில் நம் உடலில் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஒரு நாளுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் சென்று வீடு திரும்பிய பின்னர் சிலர் குளிர்ந்த பிரிட்ஜ் வாட்டர் குடிப்பார்கள். ஆனால் அது தவறு. இயற்கையாக வீட்டில் செய்யும் சில கருப்பட்டி பானங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதுடன் சத்துக்களையும் வாரி வழங்குகின்றன. வெயில் சென்று திரும்புபவர்கள் அதை பருகலாம். இதற்கென வீட்டில் உள்ள சில பொருள்களை பயன்படுத்தினால் போதும். எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் மலையை புரட்டி போடும் ஆற்றலை நமக்கு வழங்கும்.

அரிசி கழுவிய கழுநீரில் கருப்பட்டியும், கொஞ்சம் வெண்ணெயையும் சேர்த்து காலையில் அருந்தினால் வெயிலுக்கு நல்லது. அரிசியை கழுவி விட்ட நீரை விரும்பாதவர்கள் சீரகம் அல்லது சோம்பு சேர்த்த நீரை கருப்பட்டி சேர்த்து குடிக்கலாம். கருப்பட்டியுடன், எலுமிச்சை சாற்றை பிழிந்து கொஞ்சம் உப்பு, தண்ணீர் சேர்த்து குடித்தால் உற்சாகம் அதிகரிக்கும். உடலில் நீர்ச்சத்து சீராக இருக்கும். முன்பெல்லாம் கடினமான வேலை செய்பவர்கள் தொலைதூர பயணம் மேற்கொள்பவர்கள் எலுமிச்சையை தான் ஆற்றலுக்காக பயன்படுத்தினார்களாம் தெரியுமா? அதுமட்டுமில்லை, பொன்னிறமாக வறுத்த சீரகத்துடன் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் சூட்டினால் அடித்து கிளம்பும் பேதியும் நிற்கும்.

1newsnationuser3

Next Post

தமிழகம் உட்பட 7 இடங்களில் ரூ.4,445 கோடி மதிப்பீட்டில் இந்த ஜவுளிப் பூங்கா...!

Thu Apr 6 , 2023
பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் தமிழகம் உட்பட 7 இடங்களில் மெகா ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் விருதுநகர் உட்பட 7 இடங்களில் மெகா ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் விருதுநகர், தெலங்கானாவில் வாரங்கல், குஜராத்தில் நவ்சாரி, கர்நாடகத்தில் கலாபுரக்கி, மத்தியப்பிரதேசத்தில் தார், உத்தரப்பிரதேசத்தில் லக்னோ, மகாராஷ்டிராவில் அமராவதி ஆகிய 7 இடங்களில் ரூ.4,445 கோடி மதிப்பீட்டில் இந்த […]
images 2023 04 06T052515.543

You May Like