வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கரை ஒட்டாமல் கைவசம் வைத்திருந்தால் கருப்பு பட்டியல் அல்லது ஹாட்லிஸ்டில் சேர்க்க நடவடிக்கை.
பாஸ்டேக் என்பது கட்டணம் செலுத்துகைக்கான தேசிய நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் மின்வழி சுங்கக் கட்டண முறை ஆகும். இந்த நிறுவனம் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் மற்றும் வணிக வங்கிகள் ஆகியவற்றுடன் சேர்ந்து இந்தக் கட்டணங்களை வசூலிக்கிறது.
வாகனங்களின் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வங்கிக் கணக்கோடு இணைக்கப்பட்டிருக்கும். அட்டைகளுக்கான தேவையான தொகையை வங்கிக்கணக்கிலிருந்து முன்கூட்டியே ரீசார்ஜ் செய்து வைத்திருக்க வேண்டும். சுங்கச் சாவடிகளை ஒவ்வொரு முறை கடக்கும்போது கட்டணத் தொகை கழித்துக்கொள்ளப்படும். சுங்கச் சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
இந்த திட்டம் தற்போது இந்தியா முழுவதுமே நடைமுறையில் இருக்கிறது.
அதாவது இந்த திட்டத்தின் கீழ், வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்து, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலித்துவிடும். சுங்கச் சாவடியிலிருந்து ஒவ்வொரு முறையும் கட்டணத் தொகை பாஸ்டேக்கி அட்டையிலிருந்து கழித்துக்கொள்ளப்படும்போது பதிவுசெய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வந்துவிடும்.
இந்த சூழலில் வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் கைவசம் வைத்திருந்தால் கருப்பு பட்டியல் அல்லது ஹாட்லிஸ்டில் சேர்க்க தேதிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாஸ்டேக் ஒட்டாத வாகனங்கள் குறித்து சுங்கச்சாவடி நிர்வாகம் உடனுக்குடன் புகார் அளிக்கவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Read more: AI மூலம் ஆபாச வீடியோ.. இணையத்தில் வெளியிட்டு வருமானம் ஈட்டிய இளைஞன் கைது..!!