“ரத்தம் கக்கி செத்துருவ”..!! நண்பனால் வந்த வினை..!! கூடவே வந்த பில்லி, சூனியம்..!! திண்டிவனத்தில் திடுக்கிடும் சம்பவம்..!!

Poojai 2025

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பில்லி சூனியம் இருப்பதாக நம்ப வைத்து, கட்டுமான ஒப்பந்தக்காரர் ஒருவரிடம் நகை மற்றும் பணத்தைப் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திண்டிவனம் பல்லாக்குப்பத்தை சேர்ந்த கமல் பாஷா என்பவர், பெரியதச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் தனசேகர் (36) என்பவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானார். தனசேகரின் குடும்பத்திற்கு “நேரம் இல்லை, பில்லி சூனியம் மற்றும் மாந்திரீகம் உள்ளது” என்று கூறி, அதை சரி செய்ய பூஜை செய்யப் போவதாகக் கமல் பாஷா கூறியுள்ளார்.

இதை நம்பிய தனசேகரிடம் இருந்து அவர் உடுத்தும் துணிகள், 4 சவரன் நகை மற்றும் பணத்தை கமல் பாஷா வாங்கியுள்ளார். நகை மற்றும் பணத்தை கொடுத்த பின்னரும் தனசேகரின் கஷ்டங்கள் தீராததால், அவர் கமல் பாஷாவிடம் தனது நகையைத் திருப்பிக் கேட்டுள்ளார். இதுதொடர்பாக ஒரு வருடத்திற்கு முன்பு காவல் நிலையத்தில் தனசேகர் புகார் அளித்தபோது, போலீசார் தலையிட்டு பேசி இரண்டு சவரன் நகையை மட்டும் மீட்டுத் தந்தனர்.

பின்னர் மீதமுள்ள கமல் பாஷாவிடம் தனசேகர் கேட்டுள்ளார். அப்போது, “நகையை கேட்டால், அடுத்த அமாவாசைக்குள் ரத்தம் கக்கி சாகும்படி செய்து விடுவேன்” என்று கமல் பாஷா மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மீண்டும் புகார் கமல் பாஷா மீது புகார் அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தனசேகரன் விரக்தி அடைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தனசேகர் மற்றும் கமல் பாஷா ஆகிய இருவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில், தனசேகரிடம் வாங்கிய நகை மற்றும் பணத்தை அடுத்த 15 நாட்களுக்குள் திருப்பித் தந்து விடுவதாக கமல் பாஷா, காவல்துறையினரிடம் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். அதன் பின்னரே காவல்துறையினர் அவரை விடுவித்தனர்.

Read More : பைக்கின் பின் இருக்கை மட்டும் ஏன் உயரமாக இருக்கிறது தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்..!!

CHELLA

Next Post

இனி உணவகங்கள், அலுவலகங்கள், கூட்டங்களில் ஆதார் முக ஸ்கேன் நுழைவு தேவை.. UIDAI முக்கிய முடிவு!

Fri Nov 21 , 2025
இந்தியாவில் அடையாளச் சரிபார்ப்பு முறையில் பெரிய மாற்றம் வர இருக்கிறது.இந்திய தனித்துவ அடையாள ஆணையmaana UIDAI (Unique Identification Authority of India) விரைவில் ஆதாரை ஆஃப்லைனில் பயன்படுத்தும் முறையை ஒரே மாதிரியாக்கத் திட்டமிட்டு வருகிறது. இது, அடையாளத்தை சரிபார்ப்பதில் ஒரு பெரும் மாற்றமாக கருதப்படுகிறது. எங்கு பயன்படுத்தப்படும்? இந்த புதிய முறை அமலுக்கு வந்த பின், ஹோட்டல்கள், குடியிருப்பு / கேட்டட் கம்யூனிட்டிகள், உணவகங்கள், தேர்வுக் கூடங்கள், சிறப்பு […]
aadhaar jpg 1 1

You May Like