திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அமைந்துள்ளது தும்பலப்பட்டி கிராமம். இங்கு செயல்பட்டு வரும் ஒரு தனியார் செங்கல் சூளையில் நடந்த கொலை சம்பவம் தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செங்கல் சூளையில் கணக்காளராக பணியாற்றி வந்த 23 வயதான சரவணன், சம்பவத்தன்று இரவு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து காவல்துறையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் அங்கு கிராம மக்களும் ஒன்று திரண்டனர். சரவணனின் மரணம் கொலை என உறுதி செய்யப்பட்டதால், அவரது உறவினர்கள் குற்றவாளியை உடனடியாக கைது செய்யக் கோரி போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து, சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று சரவணன், அங்கு தங்கியிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி கோபாலின் 16 மற்றும் 14 வயது மகள்களுடன் பேசிக் கொண்டிருப்பது பதிவாகியிருந்தது.
இதனால், காவல்துறையினர் சிறுமிகளை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையில், 16 வயது சிறுமி சரவணனை காதலித்து வந்ததாகவும், இரவு நேரத்தில் இருவரும் தனியாகச் சந்தித்தபோது ஏற்பட்ட தகராறில், சிறுமி தள்ளியதில் சரவணன் கீழே விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமியின் தந்தை மற்றும் தங்கை இந்த சம்பவத்தை மறைக்கச் முயன்ற நிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : வீட்டில் எல்லோரும் ஒரே சோப்பு போட்டு குளிக்கிறீங்களா..? அதிர்ச்சி தரும் உண்மை..!! இனி தொடவே தொடாதீங்க..!!