இளைஞர் ஒருவர் மனைவியுடன் ஏற்பட்ட தகறாரில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் தான் அணிந்திருந்த வெள்ளை பேண்ட்டில் நீல மையால் எழுதிய தற்கொலை குறிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேசத்தில் உள்ள ஃபரூக்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கணவர் திலீப் குடிபோதையில் தன்னை தாக்கியதாக மனைவி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், திலீப் தனது தந்தையுடன் போலீஸ் நிலையத்துக்கு சென்றபோது, காவலர் யஷ்வந்த் யாதவ் அவரிடம் இந்த வழக்கை தீர்க்க ரூ.50,000 லஞ்சம் கேட்டுள்ளார். திலீப் மறுத்ததையடுத்து போலீஸார் அவரை தாக்கியுள்ளனர். பின்னர் ரூ.40,000 வாங்கி கொண்டு அவரை விடுவித்தனர்.
வீட்டிற்கு வந்ததும் திலீப், தனது கால்சட்டையில் மனைவியின் உறவினர்கள் மற்றும் போலீசாரால் துன்புறுத்தப்பட்ட விவரங்களை எழுதினார். பின்னர், வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். செவ்வாய்க்கிழமை காலை அவரது குடும்பத்தினர் உடலையும், அந்த குறிப்பு குறித்த தகவலையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
திலீப்பின் தந்தையின் புகாரின் அடிப்படையில், அவரது மனைவியின் உறவினர்கள் மூன்று பேரும், சம்பந்தப்பட்ட இரண்டு போலீசாரும் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து காவல் கண்காணிப்பாளர் ஆர்த்தி சிங் கூறியதாவது: “இரு தரப்பினரும் சண்டையிட்டனர். போலீசார் சமரசம் செய்ய முயன்றனர். திலீப் வீட்டிற்கு திரும்பிய பின் தற்கொலை செய்து கொண்டார்.
பிரேத பரிசோதனையில் எந்த வெளிப்படையான காயங்களும் இல்லை. குறித்த 5 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது, தேவையான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்றார். இந்தச் சம்பவம் மாநிலத்தில் போலீசாரின் நடவடிக்கைகள் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
Read more: நடிகரும், இயக்குநருமான வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!!