ஒரிஜினல் இயக்குனர்.. டாக்டர் பட்டம் வாங்கிய அட்லீயை பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்..

Blue sattai atlee 1693450824533 1693450839477 1

ஒரிஜினல் இயக்குனர் அட்லீ, இன்று முதல் டாக்டர் அட்லீ என்று மக்களால் அழைக்கப்படுவார் என்று ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் அட்லீ.. இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்களும் மிகப்பெரிய ஹிட்டானது.


இதை தொடர்ந்து பாலிவுட் சென்ற அட்லீ, ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார். இந்த படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது அட்லீ, அல்லு அர்ஜுனை வைத்து சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஃபேண்டசி படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சரஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் கலைத்துறையில் வழங்கிய சேவைக்காக சத்யபாமா பல்கலைக்கழகம் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இன்று 35-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது அட்லீக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த சூழலில் இதுதொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரபல சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், அட்லீயை கலாய்க்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார். அவரின் பதிவில் “ ஒரிஜினல் இயக்குனர் அட்லீ அவர்களுக்கு அலங்கார குடைகள் மற்றும் ராணுவ பாணி மரியாதையுடன்‌ வரவேற்பு தந்து டாக்டர் பட்டம் வழங்கும் சத்யபாமா யூனிவர்சிட்டி. இன்று முதல் டாக்டர் அட்லீ என்று மக்களால் அழைக்கப்படுவார்.” என்று பதிவிட்டுள்ளார்.

அட்லீ மீது பொதுவாக காப்பி கேட் இயக்குனர் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. காரணம், ஏற்கனவே வெளியாகி ஹிட்டான படங்களில் இருந்து கதைக்கருவை எடுத்துக் கொண்டு அவர் படங்களை இயக்கி வருகிறார் என்று விமர்கர்கள் விமர்சித்து வருகின்றனர். மௌன ராகம் படத்தை ராஜா ராணி என்றும், சத்ரியன் படத்தை தெறி என்றும், அபூர்வ சகோதர்கள் படத்தை மெர்சல் என்ற பெயரில் அட்லீ இயக்கினார். அதே போல் சக் தே இந்தியா உள்ளிட்ட பல படங்களில் இருந்து தான் பிகில் உருவானது. இதனால் அட்லீ என்றாலே காப்பி கேட் இயக்குனர் என்ற கருத்து நிலவுகிறது. இந்த சூழலில் தான் ஒரிஜினல் இயக்குனர் அட்லீ என்று பதிவிட்டு கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

Read More : பஞ்சுருளி தெய்வத்தின் கோபமா? காந்தாரா 2 படப்பிடிப்பில் நடந்த 3-வது மரணம்.. அதிர்ச்சியில் படக்குழு..

English Summary

Blue sattai Maran posted that the original director Atlee will be called Dr. Atlee from today onwards.

RUPA

Next Post

கம்பேக் கொடுத்த கோவிட்-19.. ஆனால் இந்த 5 எளிய பழக்கங்கள் உங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும்..

Sat Jun 14 , 2025
As the COVID pandemic continues to spread rapidly, let's take a look at 5 habits that will help keep you safe.
coronavirus prevention tips to beat Covid 19 1749553957527 1749553957714

You May Like