Flash : நடிகை த்ரிஷா, நடிகர் விஷால் வீடுகள், சிபிஐ நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. நிபுணர்கள் தீவிர சோதனை..!

Trisha Krishnan Vishal 1

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.


மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான், ஐஏஎஸ் அதிகாரிகள், இசைஞானி இளையராஜா என முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

இந்த நிலையில் சென்னையில் உள்ள நடிகர் விஷால், நடிகை த்ரிஷா, இயக்குனர் மணிரத்னம் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

மேலும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமனின் சொந்த அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது..சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மிரட்டலை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் இந்த அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்..

எனினும் இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.. த்ரிஷா வீட்டிற்கு ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. கடந்த சில நாட்களாகவே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த மர்ம நபரை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.. ஆனால் அந்த மர்ம நபர் போலீசாரிடம் சிக்காமல் தவிர்த்து வருகிறார்..

Read More : “உனக்காக என் மனைவியை கொன்றுவிட்டேன்..” பெங்களூரு டாக்டர் காதலிக்கு அனுப்பிய மெசேஜ்..!

RUPA

Next Post

“காது கேட்காது.. வாய் பேச முடியாது”..!! 13 ஆண்டுகளாக நரக வேதனை..!! மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சைக்கோ ஆசிரியர்..!!

Tue Nov 4 , 2025
கர்நாடக மாநிலம் சாமராஜ நகர் மாவட்டம் கொல்லேகலில் அமைந்துள்ள ஒரு தனியார் பேச்சு மற்றும் செவிப்புலன் பள்ளியில் அரங்கேறிய கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அங்கு ஆசிரியராக பணியாற்றி வந்த ஒருவர், கடந்த 13 வருடங்களுக்கும் மேலாகப் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளால் தங்களது நிலையை வெளியில் யாரிடமும் எடுத்துச் சொல்லவோ, பேசவோ […]
Rape 2025 4

You May Like