சென்னையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள், அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலகம் போன்ற முக்கியமான இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எனினும் சோதனைக்கு பிறகு அவை வெறும் புரளி என்பது தெரியவரும்..
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு இன்று கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. இதை தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்..
ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..