Flash : கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர விசாரணை..!

koodangulam nuclear plant 1

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.


மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான், ஐஏஎஸ் அதிகாரிகள், இசைஞானி இளையராஜா என முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. எனினும் சோதனையில் அவை வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது..

இந்த நிலையில் இன்று மீண்டும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.. மகேந்திரகிரி விண்வெளி மையத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் இன்று அணுமின் நிலையத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.. கடந்த ஒன்றறை மாதத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது இது 3-வது முறையாகும்.

Read More : விமானங்கள் ரத்து.. நாளைக்குள் பயணிகளுக்கு பணத்தைத் திருப்பி வழங்க வேண்டும்.. இண்டிகோவுக்கு மத்திய அரசு உத்தரவு..!

RUPA

Next Post

2026 இவ்வளவு ஆபத்தானதாக இருக்குமா? பாபா வங்காவின் திகிலூட்டும் கணிப்புகள்!

Sat Dec 6 , 2025
பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா, 20 ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் பிரபலமான தீர்க்கதரிசி ஆவார்.. 1911 இல் பிறந்து 1996 இல் இறந்த அவர், எதிர்கால நிகழ்வுகளை கணிப்பதில் 85 சதவீத துல்லியத்திற்காக அறியப்பட்டார். 9/11 தாக்குதல்கள், செர்னோபில் பேரழிவு மற்றும் பிரிட்டிஷ் வெள்ளம் போன்ற முக்கிய நிகழ்வுகளை அவர் கணித்ததாக சிலர் நம்புகிறார்கள். 2025 நிறைவடையவுள்ள நிலையில், 2026 க்கான அவரது கணிப்புகள் மீண்டும் ஒரு பரபரப்பான […]
baba vanga 2026 predictions 1 1

You May Like