சென்னை தலைமை செயலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் மோப்பநாய் உதவி உடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
பாதுகாப்பு கருதி, தலைமை செயலகத்தில் உள்ள அதிகாரிகள், பணியாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.. போலீசார் இந்த பகுதி முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.. சமீபகாலமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய இடங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவை எதுவும் உண்மை இல்லை என்பதும், வெறும் புரளி என்பதும் தெரியவந்துள்ளது.. இந்த சூழலில் சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
Read More : அடுத்த பேரிடி..!! அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய ஜான் பாண்டியன்..!! எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி..!!