புரட்டாசி மாதம் என்பது சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகும். இது மகாவிஷ்ணுவின் சொரூபமான புதனுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. அதேபோல், புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். புரட்டாசி மாதம் பல்வேறு விரதங்களையும் வழிபாடுகளையும் உள்ளடக்கியது. இந்த விரதங்களை கடைபிடிப்பதால் வீட்டில் மகிழ்ச்சியும், ஐஸ்வர்யமும் பெருகும் என்பது நம்பிக்கை.
சித்தி விநாயக விரதம் : புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் இந்த விரதத்தை கடைபிடிப்பதால் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.
அனந்த விரதம்: வளர்பிறை சதுர்த்தசி அன்று இந்த விரதம் இருந்தால், தீராத வினைகள் தீரும் என்பது நம்பிக்கை.
சஷ்டி – லலிதா விரதம்: வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை நினைத்து விரதம் இருந்தால், எல்லா நன்மைகளையும் பெறலாம்.
மகாளய பட்சம்: இது முன்னோர்களுக்கான காலமாகும். இந்த 15 நாட்களில் முன்னோர்கள் நம் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அவர்களை வழிபட்டால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
மகாலட்சுமி விரதம்: வளர்பிறை அஷ்டமியில் இருந்து 16 நாட்கள் லட்சுமி தேவியை வழிபட்டு விரதம் இருந்தால், வறுமை நீங்கி செல்வம் பெருகும்.
திருவோண விரதம்: பெருமாள் பக்தர்கள் இந்த விரதத்தை கடைபிடித்து, பெருமாளை வழிபடுவதன் மூலம் அவரது அருளை பெறலாம்.
அமுக்தாபரண விரதம்: வளர்பிறை சப்தமியில் உமா – மகேஸ்வரரை வழிபட்டால் குடும்பம் செழிக்கும்.
ஜேஷ்டா விரதம்: வளர்பிறை அஷ்டமியில் அருகம்புல்லைக் கொண்டு சிவனையும், விநாயகரையும் வழிபட்டால் குடும்பம் செழிக்கும்.
கபிலா சஷ்டி விரதம்: தேய்பிறை சஷ்டியில் சூரியனை வழிபட்டு, பழுப்பு நிறப் பசுமாட்டைப் பூஜிக்கும் இந்த விரதம், சித்திகளை அளிக்கும்.
Read More : புரட்டாசி மாதத்தில் ஏன் எந்த சுப காரியங்களையும் நடத்தக் கூடாது..? ஜோதிட சாஸ்திரங்கள் கூறுவது என்ன..?