“ஜூனியர் நீ.. என்னை பெயர் சொல்லி கூப்பிடுறியா..? Sir-னு சொல்லு..!” ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்த ஊழியர்..!

company

வேலையில் மரியாதை என்பது எப்போதும் “சார்” அல்லது “மேடம்” என்று சொல்லுவதில் மட்டுமே இல்லை. ஒருவர் பேசும் விதம், குரல் தொனி, நடத்தை ஆகியவற்றிலுமே அது வெளிப்படும். ஆனால், ஒரு நிறுவனத்தில் ஊழியர் – மேலாளர் இடையே ஏற்பட்ட சிறிய சம்பவம் இணையத்தில் பெரிய விவாதத்தை தூண்டியுள்ளது.


சமூக வலைதளங்களில் வைரலான பதிவில், என் முதலாளியை ‘Sir’ என்று அழைக்கவில்லை என்ற காரணத்தால் அவர் என்மீது கடுமையாகப் பேசியுள்ளார்” என்று கூறியுள்ளார். மேலும், “அவர் ஒரு செய்தி அனுப்பி, அலுவலகத்திலிருந்து வெளியேறுவதற்கு முன் வேலை சரிபார்க்கவில்லை எனக் கூறினார். அதற்கு நான் ஏற்கனவே தெரிவித்தேன் என்று பதிலளித்தேன். இதையடுத்து எங்கள் இடையே தொழில்முறை உரையாடல் நடந்தது” எனவும் தெரிவித்தார்.

“நான் அவரை ‘சார்’ என்று அழைக்காமல், ‘MR’ என குறிப்பிட்டேன். இதனால் அவர் மிகவும் கோபமடைந்து, எந்த ஜூனியரும் என்னை பெயரால் அழைக்கக் கூடாது எனக் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர், “நான் உங்களை மரியாதையுடனும் தொழில்முறையுடனும் தான் அழைத்தேன். உங்கள் பெயரைச் சொன்னதில் என்ன தவறு? நான் யாரையும் அவமதிக்கவில்லை. அதே மரியாதையை எனக்கும் எதிர்பார்க்கிறேன்” என பதிலளித்தார்.

ஒரு பயனர், “இத்தகைய மேலாளர்களுக்கு ‘Mr.’ என்று கூட சொல்லத் தேவையில்லை. பெயரை நேரடியாக பயன்படுத்துங்கள்” என்று கூறினார். மற்றொருவர், “என் குழுவினர் என்னை சார் என்று அழைக்கும்போதெல்லாம் 50 ரூபாய் ஜாடியில் போட வேண்டும் என்று நகைச்சுவையாக சொல்வேன். அந்தப் பணத்தில் நாம் அனைவரும் ஒன்றாக உணவிற்குச் செல்வோம். சார் என்று அழைக்கப்படுவது எனக்கு வெட்கமாகவே இருக்கும்” என்று பகிர்ந்தார்.

மூன்றாவது பயனர், “உங்கள் முதலாளி தேவையற்ற ஈகோ காட்டுகிறார். ஆனால் வேலைக்கு தொடர்பான விஷயங்களில் பொறுப்புடன் நடப்பது முக்கியம்” என்று அறிவுறுத்தினார். மேலாளர்கள் தங்கள் ஊழியர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Read more: ITI முடித்தவர்களுக்கு மத்திய அரசு பணி.. ரூ.30,845 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

English Summary

Boss Loses Cool After Employee Doesn’t Call Him ‘Sir’

Next Post

இந்த மாநிலத்திற்கு மிகப்பெரிய ஜாக்பாட்! 228 மில்லிடன் டன் தங்கம் கண்டுபிடிப்பு..! விரைவில் பணக்கார மாநிலமாக மாறப்போகிறது!

Wed Aug 27 , 2025
2019-2021 ஆம் ஆண்டில் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் பீகார் மாநிலமும் ஒன்று. இருப்பினும், 2019-21 மற்றும் 2022-23 க்கு இடையில் பீகார் தனது மக்கள்தொகையில் சுமார் 7 சதவீதத்தை வறுமையிலிருந்து மீட்டெடுத்ததாகக் கூறியது. 7 சதவீத வீழ்ச்சி என்பது சாதாரண விஷயம் இல்லை.. ஆனால் 2022-23 ஆம் ஆண்டில் அதன் மக்கள்தொகையில் சுமார் 26.59 சதவீத மக்கள் தொகை ஏழைகளாக இருப்பார்கள் என்று தரவு காட்டுகிறது. தற்போது, ​​பீகார் ஒரு […]
abundance gold coins massive cave 742252 37506

You May Like