மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டம் பாபுல்கான் நகரில் உள்ள ஒரு பள்ளியின் கழிப்பறையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 9 வயது மாணவன் தனது வகுப்பில் படிக்கும் சிறுமியை பெண் தோழி உதவியுடன் பலாத்காரம் செய்துள்ளான்.
காவல்துறையின் கூற்றுப்படி, மாணவனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு 8 வயதாகிறது. அந்த மாணவனுக்கு உடந்தையாக அவரது பெண் தோழி இருந்துள்ளார். ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், அந்த 8 வயது சிறுமியை பெண் தோழி பள்ளியின் கழிவறைக்கு நைசாக பேசி அழைத்து வந்துள்ளார்.
அங்கு அந்த மாணவனும் இருந்துள்ளான். பின்னர், சிறுமியை கழிவறைக்குள் இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பிறகு, அந்த சிறுமி தனது அந்தரங்க உறுப்பில் வலி இருப்பதாக தனது தாயிடம் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், அவரை மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில், சிறுமியின் அந்தரங்க உறுப்பில் காயங்கள் இருந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தார். இதையடுத்து, சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தன்னுடன் படிக்கும் தனது வகுப்பைச் சேர்ந்த மாணவன், அவனது பெண் தோழியுடன் உதவியுடன் பள்ளி கழிப்பறையில் தன்னைத் தாக்கியதாகவும், கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவனும், அவனுக்கு உடந்தையாக இருந்த மாணவியும் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : உங்கள் உடல் எடையை டக்குனு குறைக்கணுமா..? இந்த ஒரு பொடி போதுமே..!! வீட்டிலேயே தயாரிக்கலாம்..!!