தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசினார்.. முதல்வருக்கு தூய்மை பணியாளர்கள் மீது தனி அக்கறை உள்ளது.. தூய்மை பணியாளர்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது..
தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு திட்டங்களை கொண்டுவரப்பட உள்ளது.. தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கையாளும் போது ஏற்படும் நோய் பாதிப்புக்கு தனி சிகிச்சை தரப்படும். தூய்மைப் பணியாளர் நலத்திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.. தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படும்..
3 ஆண்டுகளில் தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்கப்படும்.. பணியின் இறப்பு நேரிட்டால் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.. தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில புதிய உதவித்தொகை திட்டம் தொடங்கப்படும்.. தூய்மைப் பணியாளர்கள் குடும்பத்தில் தொழில் தொடங்க ஏதுவாக கடனுதவி தரப்படும்..” என்று தெரிவித்தார்..