தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது என்று மாநிலக் கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது.. அதன்படி, நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது… 10,12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடக்கும் என கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.. அதே போல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் கட்டாய தேர்ச்சி முறை தொடரும்.. இரு மொழிக் கொள்கையே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு கூடாது, கல்வி மாநில பட்டியலுக்கு வர வேண்டும், தொடக்க நிலை முதல் உயர்கல்வி வரை தமிழ் தான் முதன்மை மொழி, ஒவ்வொரு கல்லூரியிலும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன..