Breaking : புதிய உச்சம்..! ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை! இன்று மட்டும் ரூ. 1120 உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் ஷாக்..

jewels

தங்கம் விலை இன்று காலை ரூ.560, மாலையில் ரூ.560 என ஒரே நாளில் மொத்தம் ரூ.1120 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில், சென்னையில் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.82,000ஐ கடந்து விற்பனையானது. எனினும் பின்னர் தங்கம் விலை சற்று குறைந்தது.. வார இறுதியில் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது..

இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது… அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,360க்கு விற்பனையானது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 82,880க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்தது… ஒரு கிராம் வெள்ளி ரூ. 3 உயர்ந்து ரூ.148க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,48,000க்கு விற்பனையாகிறது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையும் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,430க்கு விற்பனையானது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 83,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரே நாளில் 2வது முறை தங்கம் விலை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. தங்கம் விலை இன்று காலை ரூ.560, மாலையில் ரூ.560 என ஒரே நாளில் மொத்தம் ரூ.1120 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : Breaking : பொதுமக்களுக்கு குட்நியூஸ்.. ஆவின் பொருட்களின் விலை குறைப்பு.. எவ்வளவு தெரியுமா?

RUPA

Next Post

இந்த நவராத்திரி 5 ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தை தரும்! துர்கா தேவியின் சிறப்பு ஆசீர்வாதம் கிடைக்கும்!

Mon Sep 22 , 2025
நவராத்திரி இன்று முதல் தொடங்கி உள்ளது. இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவியை சிறப்பாக வழிபடுவதன் மூலம் பக்தர்கள் அனைத்து ஆசிகளையும் பெறுவார்கள். ஜோதிடத்தின்படி, இந்த நவராத்திரி நேரம் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு மிகவும் புனிதமானது, அவர்களுக்கு துர்கா தேவியின் சிறப்பு ஆசி கிடைக்கும். இந்த 5 ராசிக்காரர்களும் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களையும் ஆசிகளையும் காண்பார்கள். நவராத்திரியின் போது கிரக நிலைகள் மற்றும் இயக்கங்கள் சில ராசிக்காரர்களில் நேர்மறையான […]
navarathri zodiac

You May Like