தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கிற்கு அருகிலுள்ள ஒரு மார்க்கெட் பகுதியில் இன்று மர்ம ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.. இதில் சுமார் 6 பேர் கொல்லப்பட்டனர். நகரின் சதுசாக் மாவட்டத்தில் உள்ள ஓர் டோர் கோர் சந்தைகளில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களில் இது தொடர்பான துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சம்பவ இடத்திலேயே இருந்ததை பார்க்க முடிகிறது.. ஒரு நபர் கையில் துப்பாக்கியுடன் நடந்து செல்வதைக் காண முடிந்தது.
எனினும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.. துப்பாக்கிச்சூடு நடத்திய பிறகு அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக காவதுறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. தாய்லாந்து காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
தாய்லாந்து-கம்போடியா மோதல்
கடந்த வியாழக்கிழமை எல்லை பிரச்சனை தொடர்பாக தாய்லாந்து – கம்போடியா இடையே மோதல் வெடித்தது.. இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் அதிகரித்தது.. இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் தலைவர்களுடன் பேசியதாகவும், போர் தொடர்ந்தால் இரு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்களை முன்னெடுக்கப் போவதில்லை என்றும் கூறினார். பின்னர் அவர் இரு தரப்பினரும் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சந்திக்க ஒப்புக்கொண்டதாக கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்தியஸ்த முயற்சிகளைத் தொடர்ந்து, தாய்லாந்தும் கம்போடியாவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக நேற்று அறிவித்தன.. எனினும் தாய்லாந்து – கம்போடிய மோதலில் சுமார் 33 பேர் உயிரிழந்தனர்.. 168,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : 10 பேர் பலி..! பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து.. பலர் படுகாயம்..!!