Breaking : தமிழ்நாட்டில் SIR-க்கு பின் 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

Archana Patnaik 1

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது.. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த பணிகள் கடந்த 14-ம் தேதி நிறைவடைந்தது..


இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வந்தனர்.. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.. சென்னையின் 16 தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒரு வாக்காளர் பெயர் நீக்கப்பட்டுள்ளது..

சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் தொகுதியில் 89,241 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 1,27,521 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.. 

தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இதுகுறித்து விளக்கம் அளித்தார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ தமிழ்நாட்டில் இன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.. தமிழ்நாட்டில் சுமார் 98 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.. மொத்தம் 97, 37,831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன..” என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கடந்த அக்டோரில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை : 6,41,14,587

எஸ்.ஐ.ஆருக்கு பின் வாக்காளர்கள் எண்ணிக்கை : 5,43,76,755

பெண் வாக்காளர்கள் : 2,77,60332

ஆண் வாக்காளர்கள் : 2,66,63,233

மூன்றாம் பாலினத்தவர் : 7,197

மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் : 4,19,355

இறந்தவர்கள் எண்ணிக்கை : 26,94,672

இடம்பெயர்ந்தவர்கள் : 66,44,881

இரட்டைப் பதிவுகள் : 3,39,278

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் BLO-க்களை அணுகலாம். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.. இல்லை என்றால் சிறப்பு முகாம்களில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம் என்று அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்..

Read More : Flash : SIR-க்கு பின் சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. மாவட்ட வாரியான விவரம் இதோ..!

RUPA

Next Post

குரு பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்கள் கடன் சுமையிலிருந்து விடுபடுவார்கள்.! குருவின் அருள் நிச்சயம் கிடைக்கும்!

Fri Dec 19 , 2025
வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன்களால் பலரும் சிரமப்பட்டு வருகின்றனர்.. ஆனால் சில ராசிக்காரர்கள் இதுபோன்ற கடன் பிரச்சனைகளிலிருந்து விரைவில் விடுபட வாய்ப்புள்ளது. பண வரவிற்குக் காரணமான குரு, நிதிப் பிரச்சனைகள் மற்றும் கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறார். குரு உங்களுக்கு சாதகமாக இருந்தால், நிதிப் பிரச்சனைகள் மற்றும் அழுத்தங்கள் முழுமையாகக் குறைய வாய்ப்புள்ளது. தற்போது, ​​ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு மற்றும் மகரம் […]
zodiac 1

You May Like