Breaking : காலையிலேயே பெரும் ஷாக்.. ஒரே நாளில் ரூ.1600 உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் புதிய உச்சம்..!

jewels

சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் தங்கம் விலை சற்று குறைந்தது.. எனினும் வெள்ளி விலை தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.. இந்த சூழலில் நேற்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்ந்த தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது..

இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,770க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இன்று காலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.102,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ. 3 உயர்ந்து ரூ.234க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து ரூ. 2,34,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : நகைக்கடன் வாங்குவோருக்கு பேரதிர்ச்சி..!! கடன் தொகையை குறைக்க வங்கிகள் முடிவு..!!

English Summary

In Chennai today, the price of gold has increased dramatically, reaching a new high.

RUPA

Next Post

விமானங்களை போல மேகங்களுக்கு மேலே செல்லும் ரயில்.. இதுதான் உலகின் மிக உயரமான ரயில் நிலையமாம்..!

Tue Dec 23 , 2025
The train that goes above the clouds like airplanes.. This is the highest railway station in the world..!
train 1

You May Like