BREAKING | தமிழகத்திற்கு ஜாக்பாட்..!! அரிய வகை கனிமங்கள் வழித்தடம்..!! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

Nirmala 2026

2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


மத்திய பட்ஜெட் 2026-27 உரையை தொடங்கியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைப் பண்பு மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். நவீன இந்தியாவின் வளர்ச்சியை நோக்கி நாட்டை வழிநடத்துவதில் பிரதமர் மோடியின் பங்கு மகத்தானது என்று அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், “நமது பிரதமர் மோடி, தயக்கங்களுக்குப் பதிலாகத் துணிச்சலான நடவடிக்கைகளையே எப்போதும் தேர்வு செய்துள்ளார். வெறும் வெற்றுப் பேச்சுகளை விட, ஆழமான சீர்திருத்தங்களுக்கே அவர் முன்னுரிமை அளித்து வருகிறார். இதுவே இந்தியப் பொருளாதாரத்தின் அசுர வளர்ச்சிக்கு அடிப்படை,” என்று புகழாரம் சூட்டினார். சவாலான உலகளாவிய பொருளாதாரச் சூழலிலும் இந்தியா நிலைபெற்று இருப்பதற்கு இந்தத் தெளிவான முடிவுகளே காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ‘தன்னிறைவு இந்தியா’ என்பது வெறும் ஒரு வாசகம் மட்டுமல்ல, அது இந்தியாவின் முன்னேற்றத்திற்கான துருவ நட்சத்திரம் (Lodestar) போன்றது என்று அவர் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்தார். பாதுகாப்புத் துறை முதல் மின்னணு உற்பத்தி வரை அனைத்துத் துறைகளிலும் இந்தியா யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை, நாட்டைத் தற்சார்புப் பாதையில் வெற்றிகரமாக அழைத்துச் செல்வதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

பட்ஜெட்டில், இந்தியாவின் எதிர்காலத் தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒரு மைல்கல்லாக ‘அரிய வகை கனிமங்கள் வழித்தடம்’ (Rare Earth Minerals Corridor) அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். தமிழகம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய நான்கு மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளை ஒருங்கிணைத்து இந்த பிரம்மாண்டமான வழித்தடம் உருவாக்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்திற்காகக் கேரளா ஏற்கனவே 42,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் பெரும் நிதி ஆதாரத்தை வழங்க உள்ளது. இதன் மூலம் இந்த நான்கு மாநிலங்களிலும் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகத் தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் புதிய சுத்திகரிப்பு ஆலைகளும், ஆராய்ச்சி மையங்களும் அமைய இந்த பட்ஜெட் வழிவகுத்துள்ளது.

Read More : BUDGET BREAKING | 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

CHELLA

Next Post

FLASH | சென்னை, பெங்களூருக்கு அடித்த ஜாக்பாட்..!! அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும்..!! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

Sun Feb 1 , 2026
2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிவிப்புகள் : * செமி கண்டக்டர் துறைக்கு ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.  * நுண் சிறு, குறு தொழிலை ஊக்குவிக்க […]
train

You May Like