Breaking : புதிய உச்சம்..! ஒரே நாளில் ரூ.5,000 உயர்ந்த வெள்ளி விலை..! தங்கம் விலையும் தாறுமாறு உயர்வு..!

gold silver n 1

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. பின்னர் தங்கம் விலை சற்று குறைந்தது..

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.12,480க்கு விற்பனையாகிறது. இதனால் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.99,840க்கு செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ.231க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ. 2,31,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : சொந்த தொழில் தொடங்க ஆசையா..? ரூ.15 லட்சம் வரை மானியத்துடன் கடனுதவி..!! தமிழ்நாடு அரசின் அசத்தல் திட்டம்..!!

English Summary

In Chennai today, while the price of gold jewellery has increased, the price of silver has also reached a new high.

RUPA

Next Post

பெரும் சோகம்..!! கான்கிரீட் தடுப்புச் சுவர் மீது பயங்கரமாக மோதிய பேருந்து..!! 15 பயணிகள் உயிரிழப்பு..!!

Mon Dec 22 , 2025
இந்தோனேசியாவில் அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து ஒன்று பயங்கர விபத்துக்குள்ளானதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜாவா தீவில் உள்ள சுங்க சாலையில் நள்ளிரவில் நிகழ்ந்த இந்த விபாத்தில், மேலும் பலர் காயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர். தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து வரலாற்று சிறப்புமிக்க யோக்யகர்த்தா நகரை நோக்கி சுமார் 34 பயணிகளுடன் ஒரு பேருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. ஜாவா தீவின் […]
Accident 2025

You May Like