ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று ஒரு கிராமுக்கு ரூ.330 குறைந்து ரூ.13,620க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.2,640 குறைந்து ரூ.1,08,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக கடந்த 10 நாட்கள் தங்கம் விலை குறைந்து வந்தது.. குறிப்பாக நேற்று முன் தினம் மட்டும் ரூ.5360 விலை குறைந்தது.. ஆனால் நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.2000க்கு மேல் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ. 10,000 குறைந்து வெள்ளி ரூ. 2.50 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
Read More : LPG கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்..! ஒரே நேரத்தில் 2 நற்செய்திகள்.!



