Breaking : ஒரே நாளில் ரூ.20,000 விலை உயர்வு.. தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்..! பேரதிர்ச்சியில் பொதுமக்கள்..!

gold silver rate

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையாகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இன்று காலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,04,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 274க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ. 9,000 உயர்ந்து ரூ. 2,74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : பெட்ரோல் நிலையங்கள் இனி பெட்ரோலுக்காக மட்டும் அல்ல..! மத்திய அரசின் மாஸ்டர் பிளான்..! இது தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க..!

RUPA

Next Post

காலையிலேயே சோகம்.. கேட் இடிந்து விழந்ததில் 2 சிறுமிகள் உடல் நசுங்கி பலி..! சிவகாசியில் அதிர்ச்சி..!

Sat Dec 27 , 2025
சிவகாசி அருகே வீட்டின் கேட் இடிந்து விழுந்ததில் இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட்டில் கமலிகா, ரிஷிகா என்ற சிறுமிகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கேட் இடிந்து விழுந்ததால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.. 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கேட் சுவருடன் இடிந்து விழுந்ததில் சிறுமிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து […]
sivakasi

You May Like