சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ரூ. 1 லட்சத்தை நெருங்கி உள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது..
இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ரூ.12,460க்கு விற்பனையாகிறது. இதனால் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.99,680க்கு செய்யப்படுகிறது.. எனினும் ஆபரணத்தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்குவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
அதே போல் இன்று வெள்ளி விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.3 உயர்ந்து ரூ. 213க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.3000 உயர்ந்து ரூ.2,13,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..



