Breaking : வாரத்தின் முதல் நாளே ஷாக்..! ஒரே நாளில் தாறுமாறு உயர்வு; புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலை..!

gold price prediction

சென்னையில் இன்று தங்கம், வெள்ளி இரண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.13,450க்கு விற்பனையாகிறது.. இதனால் சவரனுக்கு ரூ. 1,360 உயர்ந்து ரூ.1,07,600க்கு விற்பனை செய்யப்படுகிறது..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ. 8 உயர்ந்து ரூ.318 க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்து ரூ.3.18 லட்சத்திற்கு விற்பனையாகிறது. தங்கம், வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : சாமானிய மக்களுக்கு மோடி அரசின் மிகப்பெரிய நற்செய்தி..! புதிய திட்டத்தின் மூலம் ரூ. 10,000 பெறலாம்..!

English Summary

In Chennai today, both gold and silver have seen a sharp increase in price.

RUPA

Next Post

21 பேர் பலி; பலர் காயம்; 2 அதிவேக ரயில்கள் மோதி பயங்கர விபத்து..! ஸ்பெயினில் பெரும் சோகம்..!

Mon Jan 19 , 2026
தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில் ஒன்று தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் சென்று, எதிரே வந்த மற்றொரு ரயிலுடன் மோதியதில் 21 பேர் உயிரிழந்தனர் என்றும் பலர் காயமடைந்தனர் என்றும் நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்தார். சுமார் 300 பயணிகளுடன் மாலகாவிலிருந்து மாட்ரிட் நோக்கிச் சென்ற ஒரு மாலை நேர ரயிலின் பின்பக்கப் பெட்டிகள், உள்ளூர் நேரம் இரவு 7:45 மணியளவில் கோர்டோபா அருகே தடம் புரண்டு, மாட்ரிட்டிலிருந்து […]
spain train accident

You May Like