Breaking : வாரத்தின் முதல் நாளே ஷாக்..! ஒரே நாளில் ரூ.8,000 உயர்வு..! தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!

gold silver price

சென்னையில் இன்று காலை தங்கம், வெள்ளி விலை இரண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மீண்டும் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது..

இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. அதன்படி தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.12,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,01,440க்கு விற்பனையாகிறது..

அதே போல் இன்று காலை வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.8 உயர்ந்து ரூ.265க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்து ரூ.2.65 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : மக்களின் பாக்கெட்டுகளை காலி செய்யும் வென்டிலேட்டர் மாஃபியாவிற்கு ஆப்பு..! மத்திய அரசின் புதிய விதிகள்..!

English Summary

In Chennai, both gold and silver prices have increased sharply this morning.

RUPA

Next Post

நீங்கள் தூங்குவதற்கு முன் பால் குடிக்கிறீங்களா? அப்ப, இந்த 5 வகையான பிரச்சனைகள் வருவது உறுதி!

Mon Jan 5 , 2026
People with these 5 problems should be careful when drinking milk before going to sleep at night.
Milk drinking

You May Like