Breaking : வாரத்தின் முதல் நாளே ஷாக்..! ஒரே நாளில் ரூ.1,760 உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலை ரூ.12,000 உயர்வு..!

jewels nn

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ரூ.13,120க்கு விற்பனையாகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.1,04,960க்கு விற்பனை செய்யப்படுகிறது..

அதே போல் இன்று காலை வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ. 12 உயர்ந்து ரூ.282க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து ரூ.2.82 லட்சத்திற்கு விற்பனையாகிறது. தங்கம், வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : தங்கமான போஸ்ட் ஆபிஸ் திட்டம்… ஒவ்வொரு மாதமும் உங்கள் கையில் ரூ. 5,550..! அரசு உத்தரவாதம்!

RUPA

Next Post

இதுவரை 538 பேர் பலி..! பணவீக்கம் & பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஈரானில் தீவிரமடைந்து வரும் போராட்டங்கள்..!

Mon Jan 12 , 2026
பணவீக்கம், வேலையின்மை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றைக் கண்டித்து மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளதால், ஈரான் முழுவதும் நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தப் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து குறைந்தது 538 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் கைது – இணையம் முடக்கம் அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமை செய்தி ஏஜென்சி அமைப்பு. இதுவரை […]
iran protest 2

You May Like