கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..
இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.. அந்த வகையில், காலை சென்னையில் ஆபரணத்தங்கம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ரூ.15,025க்கு விற்பனையாகிறது.. இன்று காலை சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ரூ.1,20,200 உயர்ந்தது..
அதே போல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ.375க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ரூ.3.75 லட்சத்திற்கு விற்பனையாகிறது. தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Read More : ரிஸ்க் இல்லாத லாபம்..!! வெறும் ரூ.1,000 முதலீடு போதும்..!! வட்டி மூலமே ரூ.2 லட்சம் சம்பாதிக்கலாம்..!!



