தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களத்தில் மிகப்பெரிய கூட்டணி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ரகசியப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில், இரு தரப்பிலும் தொகுதிப் பங்கீடுகள் குறித்தும் இப்போதே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் இணைவதற்குப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பச்சை கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. வரும் பொங்கல் பண்டிகை முடிந்து, தை மாதம் பிறந்தவுடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரும் இணைந்து இந்த கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தக் கூட்டணி உறுதியானதை உறுதிப்படுத்தும் விதமாக, தொகுதிப் பங்கீட்டுச் சமன்பாடுகள் இப்போதே Ground Level-லில் எதிரொலிக்க தொடங்கிவிட்டன. தற்போது மயிலம் தொகுதியின் பாமக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சிவக்குமார், வரும் தேர்தலில் அந்தத் தொகுதியை விட்டுக்கொடுத்துவிட்டு, விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்.
இதற்கு பின்னணியில் ஒரு முக்கிய அரசியல் நகர்வு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதாவது, மயிலம் தொகுதியில் அதிமுகவின் முக்கியப் புள்ளியான சி.வி. சண்முகம் களம் இறங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகவே பாமக தனது சிட்டிங் தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
Read More : 2026இல் கடக ராசிக்காரர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்..!! ஆனால் இந்த பிரச்சனையில் மட்டும் சிக்கிடாதீங்க..!!



