ஓபிஎஸ் ஆதரவாளரும், ஆலங்குளம் தொகுதிஅதிமுக எம்.எல்.ஏவுமான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார்.. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.. முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் தான் இந்த மனோஜ் பாண்டியன். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்..
திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திராவிட கொள்கைகளை முழுமையாக பாதுகாக்கும் தலைவராக மு.க ஸ்டாலின் உள்ளார் என்று தெரிவித்தார். எஞ்சி வாழ்க்கையை திராவிடக் கொள்கையை பின்பற்றும் தொண்டனாக இருக்க வேண்டுமென திமுகவில் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.. மேலும் இன்று மாலை தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக மனோஜ் பாண்டியன் அறிவித்துள்ளார்..
தொடர்ந்து பேசிய அவர், இன்றைய அதிமுக வேறொரு சொல் கேட்டு நடக்கும் இயக்கமாகவும் அதிமுக தற்போது பாஜகவின் கிளைக் கழகமாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.. தொண்டனின் உணர்வையும், மக்களின் உணர்வையும் கேட்கமாட்டேன் என்று சொல்லி அதிமுகவை கபளீகரம் செய்தவர்களோடு இருக்க முடியாது என்று எண்ணியே இன்று திமுகவில் இணைந்துள்ளதாகவும் அவர் கூறினார்..



