தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, ராமதாஸ் – சசிகலா அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..
அந்த வகையில் நேற்று முன் தினம் தொகுதி பங்கீட்டை அதிமுக இறுதி செய்தது.. மேலும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.. முதல்கட்டமாக 23 பேர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்
எடப்பாடி – எடப்பாடி பழனிசாமி
திண்டுக்கல் – திண்டுக்கல் சீனிவாசன்
நத்தம் – நத்தம் விஸ்வநாதன்
மயிலம் – சி.வி சண்முகம்
கலசபாக்கம் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி
பாலக்கோடு – கே.பி. அன்பழகன்
விராலிமலை – சி. விஜயபாஸ்கர்
ராயபுரம் – ஜெயகுமார்
நன்னிலம் – காமராஜ்
வேப்பனஹள்ளி – கே.பி.முனுசாமி
தொண்டாமுத்தூர் – எஸ்.பி.வேலுமணீ
குமாரபாளையம் – பி. தங்கமணி
மதுரை – செல்லூர் ராஜு
வேதாரண்யம் – ஓ.எஸ். மணியன்
கோவில்பட்டி : கடம்பூர் ராஜு
திருமங்கலம் – ஆர்.பி. உதயகுமார்
சிவகாசி – கே.டி. ராஜேந்திர பாலாஜி
மதுரவாயல் – பெஞ்சமின்
திருப்பரங்குன்றம் – வி.வி. ராஜன் செல்லப்பா
பவானி – கே.சி. கருப்பணன்
ஜோலார்பேட்டை – கே.சி. வீரமணி
கரூர் – எம்.ஆர். விஜயபாஸ்கர்
அரியலூர் – தாமரை எஸ். ராஜேந்திரன்
2021 தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சி.வி. சண்முகம் இந்த முறை மயிலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.. அதே போல் ராஜபாளையத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதியில் களமிறங்குகிறார்..
Read More : Breaking : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை..! ஒரே நாளில் ரூ.2800 உயர்வு.. வெள்ளி ரூ.10,000 உயர்வு..!



