Breaking : வரலாறு காணாத புதிய உச்சம்..! ஒரே நாளில் ரூ.10,000 உயர்ந்த வெள்ளி விலை.. தங்கம் விலையும் உயர்வு..!

gold silver

சென்னையில் இன்று வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையாகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இன்று காலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.102,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ.234க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ. 2,44,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : பான் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய எச்சரிக்கை.. இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளன.. தவறினால் ரூ. 1,000 அபராதம்!

English Summary

In Chennai today, the price of silver has increased by Rs. 10,000 per kilogram, reaching a new high.

RUPA

Next Post

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்தில் வேலை.. ரூ. 50 ஆயிரம் சம்பளம்..!

Wed Dec 24 , 2025
Jobs in Tamil Nadu State Election Commission for 8th graders.. Rs. 50 thousand salary..!
job 7

You May Like