Breaking : மீண்டும் ஷாக்..! ஒரே நாளில் தங்கம் விலை ரூ.3,600 உயர்வு..! ரூ.20,000 உயர்ந்த வெள்ளி..!

gold coins gold jewellery floor background 181203 24090 1

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.450 உயர்ந்து ரூ. ரூ.14,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.. நேற்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.. இன்று காலை வெள்ளி விலை ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.360க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ. 20,000 உயர்ந்து ரூ.3.60 லட்சத்திற்கு விற்பனையாகிறது. தங்கம், வெள்ளி விலை இன்று அதிரடியாக அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read More : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மத்திய பட்ஜெட்..! இந்த துறைக்கு தான் அதிக நிதி ஒதுக்கீடா..?

RUPA

Next Post

சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிடுவீங்களா..? இந்த உண்மைகளை முதலில் தெரிஞ்சுக்கோங்க..!

Fri Jan 23 , 2026
இந்த சீசனில் சந்தையில் சர்க்கரைவள்ளிக்கிழங்குகளுக்கு அதிக தேவை உள்ளது. இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களும் சேர்மங்களும் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதனால் தான் அவை நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கின்றன. இருப்பினும், கலப்படம் இப்போது ஒரு பெரிய பிரச்சனையாகிவிட்டது. தற்போது, ​​ரசாயனங்கள் கலக்கப்பட்ட சர்க்கரைவள்ளிக்கிழங்குகள் சந்தைக்கு வருகின்றன. இவற்றை தொடர்ந்து சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று FSSAI எச்சரிக்கிறது. ரசாயனங்கள் கலக்கப்பட்ட சர்க்கரைவள்ளிக்கிழங்குகளை எப்படி அடையாளம் காண்பது என்று தெரிந்துகொள்வோம். […]
sweet potato 1

You May Like