Breaking : மீண்டும் ஷாக் ..! 2 முறை உயர்வு..! ஒரே நாளில் ரூ.2,560 உயர்ந்த தங்கம் விலை! வெள்ளி விலையும் ரூ. 20,000 அதிகரிப்பு..!

jewels nn

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை உயர்ந்துள்ளது.. அதன்படி, இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மேலும் ரூ.240 உயர்ந்து ரூ.14,270க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் இன்று காலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ. 1,920 உயர்ந்து, ரூ.1,14,160-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.2,560 விலை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

இன்று காலை அதிரடியாக குறைந்த வெள்ளி விலை பிற்பகலில் அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.20 உயர்ந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ரூ.3 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : “போதை மாடல் திமுக ஆட்சி, இனியும் தொடர்ந்தால்.. மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும்..” அண்ணாமலை விமர்சனம்..!

RUPA

Next Post

“மோடி கலக்கத்தில் உள்ளார்.. டிரம்பின் அழுத்தம் காரணமாகவே கையெழுத்து..” ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

Tue Feb 3 , 2026
டிரம்ப்பின் அழுத்தத்தின் காரணமாகவே பிரதமர் மோடி இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் எம்.பி. ராகுல் காந்தி, நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசினார். நான்கு மாதங்களாக முடங்கிக் கிடந்த இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் திடீரென்று எப்படி கையெழுத்தானது என்று கேள்வி எழுப்பினார். மேலும், அந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவரங்களையும் மத்திய அரசிடம் இருந்து அவர் கோரினார். பிரதமர் மோடி நாட்டை விற்றுவிட்டார் […]
pm modi and rahul gandhi 162010700 16x9 0 1

You May Like