தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இரு கார்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததால் தலைநகரில் பதற்றம் நிலவுகிறது.. செங்கோட்டை அருகே மெட்ரோ முதலாவது நுழைவு வாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.. மிகுந்த சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டு தீ பரவியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்..
செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு காரில் வெடிப்பு ஏற்பட்டதாக தங்களுக்கு அழைப்பு வந்ததாக டெல்லி தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.. இந்த குண்டுவெடிப்பில் 3 அல்லது 4 வாகனங்களும் தீப்பிடித்து சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.. இந்த குண்டுவெடிப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர், இருப்பினும் சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.. எனினும் இந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனினும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது.. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர் காவல்துறை இன்று நடத்திய மிகப்பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றான ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (AGuH) ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பைக் கண்டுபிடித்தது. பல மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம், 7 பேர் கைது செய்யப்பட்டனர், வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் மறைகுறியாக்கப்பட்ட தகவல் தொடர்பு கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை “வெள்ளை காலர் பயங்கரவாத சுற்றுச்சூழல் அமைப்பு” என்று இதனை குறிப்பிட்டுள்ளது.. 2,900 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது..
இந்த சூழலில் டெல்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதால், இது பயங்கரவாதிகளின் நாசவேலையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.. மேலும் டெல்லியில் அதிகபட்ச பாதுகாப்பு உஷார்நிலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
Read More : பயங்கரவாத வழக்கு.. பெண் மருத்துவர் கைது! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்..!



