புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 3 இல் ஏர் இந்தியா பேருந்து தீப்பிடித்து எரிந்தது. எனினும் பேருந்து தீப்பிடித்தபோது அதில் யாரும் இல்லை பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விமான மீட்பு மற்றும் தீயணைப்பு குழுவினர் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
எனினும் தீ விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.. இந்த சம்பவம் பிற்பகல் 1 மணியளவில் நடந்தது, முனையம் 3 இன் வான்வழிப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த CNG-யால் இயங்கும் பயணிகள் பேருந்து திடீரென தீப்பிடித்தது. பயணிகள் யாரும் பேருந்தில் ஏறவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்து குறித்து மதியம் 1:00 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக டிசிபி விசித்திர வீர் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் போலீசார் மற்றும் CISF பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்ததாக அவர் கூறினார்.
மேலும் “ இதுவரை கிடைத்த தகவலின்படி, அந்த நேரத்தில் பேருந்து எந்த பயணிகளையும் அல்லது பொருட்களையும் எடுத்துச் செல்லவில்லை. ஓட்டுநர் மட்டுமே உள்ளே இருந்தார்” என்று அதிகாரி கூறினார்.
தீ விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். “தீ விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய வாகனம் ஆய்வு செய்யப்படும்,” என்று டிசிபி வீர் கூறினார்.
இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அதில், ஏர் இந்தியா விமானத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் பேருந்து தீப்பிடித்து எரிவதை பார்க்க முடிகிறது.. 2-3 நிமிடங்களுக்குள் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது, இதனால் அருகிலுள்ள விமானங்கள் அல்லது விமான நிலைய நடவடிக்கைகளுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read More : மோன்தா புயல் இன்று கரையைக் கடக்கும்போது எந்தெந்த இடங்கள் பாதிக்கப்படும்? வானிலை மையம் முக்கிய அப்டேட்!



