அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நிராகரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது..
திண்டுக்கலை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வானது உள்ளிட்டவற்றை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த தேர்வு முறை தவறானது என்றும், கட்சி விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்..
இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்..
இந்த நிலையில் இந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.. கட்சி விதிப்படி அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.. மேலும் விதிகளின் படி பொதுச்செயலாளர் தேர்வான என தெரிவிக்கவில்லை என்று கூறிய நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.. மேலும் பொதுக்குழு தீர்மானம் மூலம், பழனிசாமியை தேர்வு செய்ததற்கு எதிரான வழக்கு செல்லும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த உத்தரவு, எடப்பாடி பழனிசாமிக்கு சிறிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. எனினும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது..