10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி இன்று வெளியாகிறது.
2023 கல்வியாண்டிற்கான 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் மற்றும் கால அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிட உள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் பாடஅளவு குறைக்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு அட்டவணை இன்று வெளியாக இருக்கிறது.

முன்னதாக, 2023 கல்வியாண்டிற்கான 10 ,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் பிப்ரவரி 15ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.