Breaking : தொடர் சரிவு.. ஒரே நாளில் ரூ.7,600 குறைந்த தங்கம் விலை.. வெள்ளியும் ரூ.20,000 குறைந்ததால் மகிழ்ச்சி..!

gold new

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அந்த வகையில், இன்று காலை சென்னையில் ஆபரணத்தங்கம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.13,950க்கு விற்பனையாகிறது.. இன்று காலை சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது… அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.20 குறைந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ரூ.3 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : 3-ம் ஆண்டில் தவெக..! நமது வருகையால் 2026 தேர்தல் களமே மாறி உள்ளது.. தொண்டர்களுக்கு விஜய் கடிதம்..!

RUPA

Next Post

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை திடீர் நிலநடுக்கம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..!

Mon Feb 2 , 2026
ஜம்மு காஷ்மீரில் திடீரென நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் திங்கட்கிழமை காலை 5:30 மணிக்கு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் தீவிரம் 4.8 ஆகப் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தின் மையப்புள்ளி ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள புட்காம் மாவட்டத்தில் இருந்ததாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஸ்ரீநகர், புல்வாமா, ஷோபியான் மற்றும் பாரமுல்லா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் அச்சத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். மேலும் அதிர்வுகள் […]
Drake Passage Earthquake

You May Like