தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் -புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், நேற்று முன் தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் நகரும் என்று வலுகுறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் இது நகராமல் சென்னை கடற்கரை பகுதியிலேயே 18 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.. இதனால் நேற்று முன் தினம் முதலே சென்னை, திருவள்ளூர், மற்றும் புறநகர் பகுதிகள் கனமழை கொட்டி தீர்த்தது..
இன்று காலை சென்னை அருகே கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.. இது கடற்கரையை நோக்கி நகரும் போது மேலும் வலுவிழக்க வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இது அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக பலவீனமடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.. இன்றும் சென்னை, புறநகர் பகுதிகளில் கனமழை தொடர்ந்தது..
இந்த நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. தொடர் மழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்..
அதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார்.. தொடர் மழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்..
Read More : பொங்கலுக்கு ரூ.2,000 பரிசுத்தொகை? விரைவில் தமிழக அரசின் சர்ப்ரைஸ் அறிவிப்பு..!



