கரூரில் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.. இதுதொடர்பாக தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.. இவர்கள் இருவரும் இன்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்..
அப்போது நீதிபதிகள் தவெக தரப்பினருக்கு சரமாரி கேள்விகளை எழுப்பினர்.. விஜய் பிரச்சாரம் செய்த இடத்தில் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்தனர். 1.20 லட்சம் சதுர அடி கொண்ட லைட் ஹவுஸ் பகுதியில் போலீஸ் அனுமதி வழங்கவில்லை என தவெக தரப்பு வாதிட்டது.. ஆனால் லைட் ஹவுஸ் பகுதியில் அமராவதி ஆற்றுப்பகுதி இருக்கிறது, அங்கு பாலம் இருப்பதால் ஆபத்தான பகுதி என்று அனுமதி வழங்கவில்லை என்று காவல்துறை தெரிவித்தது..
சென்ற வாரம் அதிமுகவின் கூட்டம் நடந்தது.. அதனால் பாதுகாப்பு கருதி இந்த இடத்தை கொடுத்தோம் என்றும் காவல்துறை தெரிவித்தனர்.. இதை கேட்ட நீதிபதி, ஒரு மைதானம் போன்ற இடத்தை கேட்கவில்லை என்று தவெக தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.. மேலும் எந்த அடிப்படையில் 10,000 பேர் தான் வருவார்கள் என்ற வாதத்தை முன் வைத்தீர்கள்? அப்போது சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் குறைவான எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என நினைத்தோம் என தவெக தரப்பு வாதிட்டது.. ஆனால் தவெக கேட்ட 3 இடங்களும் போதுமானது அல்ல..
அப்போது குறுக்கிட்ட நீதிபதி வார விடுமுறை, காலாண்டு விடுமுறை நாளில் குறைந்த எண்ணிக்கையில் வருவார்கள் என எப்படி கணித்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.. மேலும் அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா? அவருக்கு சொல்லப்பட்டதா?
அதற்கு கரூர் பாலத்தில் இருந்து விஜய் வேண்டுமென்ற தாமதமாக வந்தார் என்ற குற்றச்சாட்டையும் காவல்துறையினர் தெரிவித்தனர்.. போலீஸ் கூறியதை மீறி ராங் ரூட்டில் விஜய் வந்தார் என்றும், முனியப்பன் கோயில் பகுதியில் விஜய் கேரவனுக்குள் சென்றுவிட்டார் என்றும், அவரை பார்த்தால் கூட்டம் கலைந்திருக்கும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.. விஜய் வாகனம் குறிப்பிட்ட இடத்திற்கு வந்த உடன் அங்கேயே நிறுத்தும்படி கூறினேன்.. ஆனால் விஜய் வாகனம் இன்னும் முன்னே செல்ல வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.. தவெகவினர் நேர அட்டவணையை பின்பற்றவில்லை..கரூருக்கு விஜய் எத்தனை மணிக்கு வருவார் என்று கூறியிருந்தார்களோ அந்த நேரத்திற்கு விஜய் விஜய் வரவில்லை.. கைது செய்யப்பட்ட மதியழகன், பவுன் ராஜ் இருவரும் வாகனத்தை செல்லவிடாமல் தடுத்தது தான் கூட்ட நெரிசலுக்கு காரணம்.. சாப்பாடு இல்லாமல் குழந்தைகளுடன் பெண்கள் காத்திருந்தனர்.. நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணையில் உண்மை தெரியவரும்..” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்..
அப்போது நீதிபதி கூட்டம் அதிகமானதும் விஜய் பேச்சை நிறுத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.. ஆனால் இவ்வளவு கூட்டம் வரும் என்று தங்களுக்கே தெரியாது என தவெக தரப்பு வாதிட்டது..
அப்போது நீதிபதி மற்ற தலைவர்களுடன் விஜய்யை ஒப்பிட முடியாது.. விஜய் ஒரு டாப் ஸ்டார், விஜய் பிரச்சாரத்திற்கு வந்தாலே அது மாநாடு தான்.. எனவே 10,000 பேர் தான் வருவார்கள் நீங்கள் கணித்ததே தவறு என தெரிவித்தார்.. அப்போது தவெகவினர் பல்வேறு ஆவணங்களை கொடுத்தனர்.. ஆனால் எந்த ஆவணத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நீதிபதி என் மனசாட்சிபடியே உத்தரவிடுவேன் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்..
இந்த வழக்கு சற்று முன்பு விசாரணைக்கு வந்த போது தவெக நிர்வாகிகள் இருவருக்கும் அக்டோபர் 14 வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.. தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன் ராஜை சிறையிலடைக்க உத்தரவு பிறப்பித்தார்.
Read More : பரபரப்பு.. கரூர் விரைந்த பாஜக எம்.பி.க்கள் குழுவின் கார் அடுத்தடுத்து மோதி விபத்து..!!