டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் மெதுவாகச் சென்ற கார் திடீரென வெடித்து சிதறியது.. இந்த சக்திவாய்ந்த வெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர்.. 20 பேர் காயமடைந்தனர்..
இந்த நிலையில் செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த “சதிகாரர்கள் யாரும் தப்பமாட்டார்கள் என்றும் அவர்கள், தண்டிக்கப்படுவது உறுதி என்றும் பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார்.. பூட்டானின் திம்புவில் பேசிய அவர் இந்த சம்வத்திற்கு “பொறுப்பான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்று கூறினார்.
தொடர்ந்து “இன்று நான் கனத்த இதயத்துடன் இங்கு வருகிறேன். டெல்லியில் நேற்று மாலை நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் வருத்தப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன். இன்று முழு நாடும் அவர்களுடன் நிற்கிறது” என்று இன்று காலை பூட்டானுக்கு தனது இரண்டு நாள் பயணத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி கூறினார்.
மேலும் “இந்த சம்பவத்தை விசாரித்து வரும் அனைத்து நிறுவனங்களுடனும் நான் நேற்று இரவு முழுவதும் தொடர்பில் இருந்தேன். எங்கள் நிறுவனங்கள் இந்த சதியின் வேர் வரை சென்று, இதற்குப் பின்னால் உள்ள உண்மையை கண்டுபிடிப்போம்.. சதிகாரர்கள் யாரும் தப்ப முடியாது.. பொறுப்பான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்,” என்று பிரதமர் மேலும் கூறினார்.
Read More : டெல்லி கார் வெடிப்பு.. பீதியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய மருத்துவர்? நடந்தது என்ன? பகீர் தகவல்கள்..!



