முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.. அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.. இன்றுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் இன்று ஓபிஎஸ் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. எனினும் முதலமைச்சரை ஓபிஎஸ்-ஐ சந்தித்ததற்கான காரணம் வெளியாகவில்லை..
திமுக உடன் இணைந்து ஓபிஎஸ் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறாரா? அல்லது தனிக்கட்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது தவெக உடன் கூட்டணி அமைப்பாரா? என்பது தெரியவில்லை.. தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படப் போகும் மாற்றத்திற்கான முன்னோட்டமாக இந்த சந்திப்பு நடந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது..
இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன் என்பது குறித்து ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.. சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ 5 ஆண்டுகால ஆட்சி சிறப்பாக இருந்ததால் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.. திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சி சிறப்பாக இருந்ததால் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது.. மக்கள் நினைப்பதை தான் எனது ஆதரவு எம்.எல்.ஏ ஐயப்பன் பேசி உள்ளார்.. திமுகவின் திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது, மக்கள் மனதில் திமுக இடம்பிடித்துள்ளதால் திமுக ஆட்சி மீண்டும் அமையும்..” என்று தெரிவித்தார்..



