சென்னையில் போதை பொருள் வழக்கில் நடிகர் சிம்புவின் முன்னாள் உதவியாளர் ஷர்புதின் உள்ளிட்ட 3 பேர் போதை பொருள் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.. ஷர்புதின் சிம்புவின் உதவியாளராகவும் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர் என்று தகவல் வெளியாகி உள்ளது.. மேலும் சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் இணை தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் ஷர்புதீன் இருந்துள்ளார்..
போதை பொருள் விற்பனை தொடர்பான வழக்கில் கைதானவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் ஷர்புதின் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்..
சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் தனது வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஷர்புதின் சினிமா பிரபலங்களுக்கு தொடர்ந்து போதை பார்ட்டி அளித்து வந்ததாக கூறப்படுகிறது.. சினிமா பிரபலங்கள் பலரும் இந்த பார்ட்டியில் சிலர் போதை போதை பொருள் பயன்படுத்தியதும் அம்பலமாகி உள்ளது.. ஷர்புதின் அளித்த போதை பார்ட்டியில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
ஷர்புதின் வீட்டில் காவல்துறை சோதனை நடத்தியதில் ரூ.25 லட்ச ரூபாய் ரொக்கமும் ஒரு சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
Read More : கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன்..!! மனைவியும், மாமியாரும்..!! தூக்கில் தொங்கவிட்டு நாடகம்..!!



