இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.. உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.. அவருக்கு வயது 68. அவரின் மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு இசைக்கலைஞர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
சபேஷ், தேவா மற்றும் முரளி ஆகிய மூவரும் உடன்பிறந்தவர்கள். சபேஷ், தேவா மற்றும் முரளி ஆகியோருடன் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.. குறிப்பாக சபேஷ், தனது சகோதரர் முரளியுடன் இணைந்து இசையமைத்துள்ளார், மேலும் அவர் தேவா இசையமைத்த படங்களில் பின்னணி இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இருவரும் இணைந்து இசையமைத்த சில படங்களுக்குப் பிறகு, அவர்கள் “சபேஷ்-முரளி” என்ற பெயரில் தனி இசையமைப்பாளர்களாக அறியப்பட்டனர்.
சபேஷ், தனது சகோதரர் முரளியுடன் இணைந்து பல தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். பொக்கிஷம், மிளகா, இம்சை அரசன் 23-ம் புலிகேசி உள்ளிட்ட படங்களுக்கு சபேஷ் முரளி இசையமைத்துள்ளனர்.. மேலும் தேவா இசையமைத்த பல படங்களில், சபேஷ் மற்றும் முரளி ஆகியோர் பின்னணி இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளனர். பாரிஜாதம், ஆட்டோகிராப், பட்டாளம், அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட பல படங்களுக்கு பின்னணி இசை மட்டும் அமைத்துள்ளனர்.. சமீபத்தில், தேவாவுக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து சபேஷ் வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



