BREAKING | இரவோடு இரவாக தவெகவில் இணைந்தார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ந.சுப்பிரமணியன்..!! பேரதிர்ச்சியில் இபிஎஸ்..!!

Vijay 2026

தமிழக அரசியல் களத்தில் 2026 தேர்தலை இலக்காக கொண்டு களம் இறங்கியுள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’, மற்ற கட்சிகளின் மூத்த நிர்வாகிகளை ஈர்க்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், செங்கோட்டையன் மற்றும் கு.ப.கிருஷ்ணன் போன்ற மூத்த தலைவர்களின் அரசியல் நகர்வுகளை தொடர்ந்து, தற்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ந.சுப்பிரமணியன் அக்கட்சியில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. நேற்றிரவு கட்சித் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்த அவர், முறைப்படி தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.


புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ந.சுப்பிரமணியன், கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கந்தர்வக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக (2011-2016) பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நீண்ட கால அதிமுக விசுவாசியான இவர், தற்போது விஜய்யின் தலைமைக்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியில் இணைந்துள்ளார்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பது, குறிப்பாகப் புதிய கட்சியான தவெகவில் தங்களை இணைத்துக் கொள்வது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான களம் ஒரு புதிய திசையை நோக்கி நகர்வதையே காட்டுகிறது. அனுபவம் வாய்ந்த பழைய முகங்களின் வருகை, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த உதவும் என விஜய் தரப்பு நம்புகிறது.

Read More : அவிட்டம் நட்சத்திரத்தில் வரும் மாசி அமாவாசை..!! தோஷம் நீங்கி உங்கள் குலம் செழிக்க இந்த வழிபாடு முக்கியம்..!!

CHELLA

Next Post

பயங்கர ஷாக்கிங் திமுக..!! அதிமுகவில் இணையும் மு.க.அழகிரியின் தீவிர விசுவாசி..!! குஷியில் எடப்பாடி பழனிசாமி..!!

Tue Feb 17 , 2026
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலதுகரமாக அறியப்படுபவரும், மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயருமான பி.எம்.மன்னன், தனது ஆதரவாளர்களுடன் விரைவில் அதிமுகவில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இந்த இணைப்பை உறுதி செய்ய அவர் காத்திருப்பதாக தெரிகிறது. கடந்த 2014-ம் ஆண்டு திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டபோது, அவருக்காக […]
Mannan 2026

You May Like