அதிமுக அமைப்பு செயலாளரும், அதிமுக முன்னாள் எம்.பியான அன்வர் ராஜா, அதிருப்தியில் இருந்து வந்தார் அதிமுக பாஜக கூட்டணி வைத்ததில் இருந்தே அவர் கூட்டணிக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்தார்.. மேலும் சிஏஏ, வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்தார்.. இதனால் அதிமுக தலைமைக்கும் அன்வர் ராஜாவுக்கும் இடையே பனிப்போர் அதிகரித்தது.. 2019-ல் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்த போதே இது தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார்..
இந்த நிலையில் அன்வர் ராஜா திமுக இணிஅய உள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக அவர் இன்று அண்ணா அறிவாலத்திற்கு சென்ற நிலையில், அவரை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்..
இந்த சூழலில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னிலையில் அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார்.. அப்போது திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.. 2026ல் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மூத்த தலைவர் அன்வர் ராஜா திமுகவில் இணைந்திருப்பது அரசியலில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
அன்வர் ராஜா பின்னணி :
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு அதிமுக உடைந்த போது, ஜானகி அணியில் இருந்த அவர், 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த அணி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.. பின்னர் ஜெயலலிதா தலைமையின் கீழ் அதிமுகவில் சேர்ந்தார்.. அப்போது முதல் தோற்றாலும், வென்றாலும் அதிமுகவே என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர் அன்வர் ராஜா..
அதிமுகவின் சிறுபான்மை சமூக மக்களின் முகமாக இருந்த அவருக்கு 2001 ஜெயலலிதா ஆட்சியில் மாநில அமைச்சர் பதவி கிடைத்தது.. அப்போது அவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் அன்வர் ராஜா..
2014 மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை எம்.பியானார் அன்வர் ராஜா.. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலா பக்கம் இருந்த அவர், பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். 2021-ல் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததுடன், சசிகலாவுக்கு ஆதரவாக பேட்டி அளித்ததால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.. பின்னர் 2023-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்..
Read More : வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. சென்னையில் பார்கிங் கட்டணம் ரத்து..!! – மாநகராட்சி அறிவிப்பு